தொழில் நிறுவனங்களின் வளாகங்களுக்குள் அமர்ந்து தொழிலாளர்கள் தர்ணா போராட்டம் செய்வது சட்ட விரோதம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தனியார் தொழில் நிறுவனம் ஒன்று தொடர்ந்த வழக்கில் இந்தத் தீர்ப்பை நீதிமன்றம் அளித்துள்ளது. தொழில் நிறுவன வளாகத்திற்குள் பணி நேரத்தை தாண்டி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டால் அது கிரிமினல் சட்ட விதி மீறல் என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளனர். இத்தவறை இழைப்பவர்கள் மீது 441வது சட்டப் பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம் என்றும் நீதிபதி தெரிவித்தார்.
போராட்டத்தின் நோக்கம் எதுவாக இருந்தாலும் அதை தொழில் நிறுவன வளாகத்திற்குள் இருந்து செய்வது தவறு என நீதிபதி தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்டம் அடிகத்தூரில் உள்ள வாகன தொழிற்சாலையில் தொழிலாளர்கள் கடந்த மே 2ம் தேதியிலிருந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.