தமிழ்நாடு

யானைகளை விரட்ட கும்கி வரவழைப்பு!

யானைகளை விரட்ட கும்கி வரவழைப்பு!

webteam

கோவை மேட்டுப்பாளையம் பெரியநாயக்கன்பாளையம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் ஊருக்குள் மீண்டும் யானைகள் நுழைவதை தடுக்க கும்கி வரவழைக்கப்பட்டுள்ளது. 

கோவை மேட்டுப்பாளையம் சுற்றியுள்ள பகுதியில் சுற்றி வரும் யானையை நேற்று அதிகாலை முதல் வனத்திற்குள் விரட்ட வனத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர். ஆனால், யானை மீண்டும் மீண்டும் குடியிருப்பு பகுதிக்குள்ளேயே புகுந்து, பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது. வேட்டை தடுப்பு காவலர்களும் வனத்துறை ஊழியர்களின் பெரும் முயற்சியால் குருடிமலை வனப்பகுதிக்குள் யானை விரட்டப்பட்டது. 

ஆனால், மீண்டும் யானை ஊருக்குள் நுழைய வாய்ப்புள்ளதால், கோவை சாடிவயல் யானைகள் முகாமில் இருந்து சுஜய் என்ற கும்கியானை வரவழைக்கப்பட்டுள்ளது.குருடிமலை வனத்திற்குள் இருந்து யானை ஏதேனும் வெளியேறினால் அதனை கும்கியின் உதவியோடு அடர் வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் தயாராகி வருகின்றனர். ஊருக்குள் சுற்றி வரும் யானை நேற்று தனது குட்டியுடன் தாக்கியதில் பெண் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.