குஜராத்தில் இருந்து மீட்கப்பட்ட மாமன்னர் ராஜராஜன் சிலையை தஞ்சை அரண்மனை அறங்காவலரிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குஜராத்தில் இருந்து மீட்கப்பட்ட சிலைகளை ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு காவல்துறையினர் கும்பகோணம் சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். அந்தச் சிலைகளை தஞ்சை அரண்மனை அரங்காவலர் பரணிதரணிடம் ஒப்படைக்க, நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து சிலைகள் திருவையாறு ஐயாரப்பர் கோயிலுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
அங்கு சிறப்பு வழிபாடுகள் முடிந்த பின்னர், சிலைகள் தஞ்சை அரண்மனை அறங்காவலரிடம் ஒப்படைக்கப்படும். அதனை அரண்மனை நிர்வாகம் பெரிய கோயிலில் வைக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெரிய கோயிலில் வைக்கப்படும் வரை சிலைகளுக்கு பாதுகாப்பு வழங்க, தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.