தமிழ்நாடு

மறக்க முடியுமா? இன்று கும்பகோணம் தீ விபத்து நினைவு தினம்

மறக்க முடியுமா? இன்று கும்பகோணம் தீ விபத்து நினைவு தினம்

webteam

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தனியார் பள்ளி தீ விபத்தில் 94 குழந்தைகள் உயிரிழந்ததன் 13அவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

குழந்தைகளை இழந்த பெற்றோர், பொதுமக்கள் தன்னார்வலர்கள் பலர் கனத்த இதயத்துடன் பள்ளி முன் கூடி கண்ணீர் சிந்தினர். தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் படங்களை வைத்து தீபமேற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. உயிரிழந்த குழந்தைகளின் நினைவாக பாலக்கரையில் அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்தில் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினார்கள். உயிரிழந்த குழந்தைகளுக்கு பிடித்த உணவுகளை வைத்து, பெற்றோர் அழுதது, அங்கு வந்திருந்தவர்களை கண்கலங்கச் செய்தது. குழந்தைகள் நினைவாக இன்று மாலை தீபத்துடன் ஊர்வலமாகச் செல்லும் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.