தமிழ்நாடு

கும்பகோணம் தீ விபத்தில் தண்டனை பெற்ற 9 பேர் விடுதலை

கும்பகோணம் தீ விபத்தில் தண்டனை பெற்ற 9 பேர் விடுதலை

webteam

கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் தண்டனை அனுபவித்து வரும் 9 பேரையும் இதுவரை சிறையில் இருந்ததை தண்டனை காலமாக கருதி விடுவித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை‌ கிளை உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2004 ஆம் ஆண்டு கும்பகோணத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கில் பள்ளி நிறுவனர் பழனிசாமி உள்ளிட்ட 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்த தஞ்சாவூர் மாவட்ட நீதிமன்றம், 11 பேரை விடுவித்து உத்தரவிட்டது.

ஆயுள் தண்டனையை எதிர்த்து பழனிசாமி சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கே‌ட்ட நீதிபதி, இதுவரை அவர்கள் சிறையில் இருந்ததை தண்டனை காலமாக கருதி 9 பேரையும் விடுவித்து உத்தரவிட்டார்.