தமிழ்நாடு

வெகு விமர்சையாக நடைபெற்ற பூலாம்பாடி தர்மராஜர் திரௌபதி அம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம்

kaleelrahman

பூலாம்பாடி அருள்மிகு ஸ்ரீ தர்மராஜர் திரௌபதி அம்மன் திருக்கோயில் கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோபுர தரிசனம் செய்தனர்.

பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடி கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ தர்மராஜா திரௌபதி அம்மன் திருக்கோயில் 400 ஆண்டுகள் பழமையானது. இந்நிலையில், இத்திருக்கோயில் புணரமைக்கப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

கடந்த ஜுலை 4ம் தேதி தொடங்கிய கும்பாபிஷேக விழாவில், கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து கும்ப அலங்காரம், ஜெப ஹோமம் உள்ளிட்ட பூஜைகளும் நான்கு கால யாக வேள்வி பூஜையும் நடைபெற்றது.

இதனையடுத்து இன்று மஹாபூர் னா ஹீதி பூஜைகளுக்கு பிறகு யாக சாலையிலிருந்து பக்தி பரவசம் முழங்க கடங்கள் புறப்பட்டு இராஜகோபுர விமானம், மூலவர் விமானம், மற்றும் பரிவார தெய்வங்களின் கோபுர விமானங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மஹா தீபாரதனை நடைபெற்றது.

இந்த குடமுழுக்கு விழாவில் தொழிலதிபர் டத்தோ பிரகதீஸ்குமார், தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்சிவசங்கர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். பாதுகாப்பு பணியில் பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணி தலைமையில் பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.