கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த கன மழையால் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கித் தவித்த மக்களை தீயணைப்பு படை வீரர்கள் படகு மூலம் பத்திரமாக மீட்டனர்.
குமரி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்தது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குளங்கள் நிரம்பி உடைப்பு ஏற்பட்டது. இதனால் நாகர்கோவில் அருகே உள்ள திருப்பதிசாரம், சகாயநகர் ,வெள்ளமடம் தோவாளை உள்ளிட்ட பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது.
இதையடுத்து தகவல் அறிந்த அதிகாரிகள், தீயணைப்பு படை வீரர்கள் உதவியோடு படகில் சென்று வெள்ளத்தில் சிக்கியிருந்த மக்களை மீட்டு முகாம்களில் தங்க வைத்தனர்.