காங்கிரஸ் கட்சியின் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று கோக் அருந்தி முடித்து வைக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசின் காதி நிறுவன காலண்டர்களில் கைத்தறி ராட்டினத்துடன் காந்தி படம் இருப்பதற்கு பதில் பிரதமர் மோடி படம் இடம் பெற்றுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
இதில் பேசிய குமரி அனந்தன், தனது அனைத்து தேவைகளுக்கும் உள்நாட்டுப் பொருட்களையே பயன்படுத்தி வருவதாக கூறினார். ஆனால், போராட்டத்தில் பங்கேற்ற பலர் உண்ணாவிரதத்தை முடிக்கும்போது, கோக் குளிர்பானம் அருந்தி போராட்டத்தை முடித்துக் கொண்டனர். வெளிநாட்டுக் குளிர்பானங்களுக்கு எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில் போராட்டக்குழுவினரின் இந்த நடவடிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.