தமிழ்நாடு

கருணாநிதி விரைவில் நலம்பெற குமாரசாமி, சந்திரபாபு நாயுடு வாழ்த்து

கருணாநிதி விரைவில் நலம்பெற குமாரசாமி, சந்திரபாபு நாயுடு வாழ்த்து

Rasus

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி நலம் விசாரித்தார்.

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை நேற்று அறிக்கை வெளியிட்டது. இதனையடுத்து பல அரசியல் தலைவரும் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்திற்கு சென்று அவரின் உடல்நிலை குறித்து மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்து வருகின்றனர். இதனிடையே கருணாநிதிக்கு ஏற்பட்ட நோய்த்தொற்று, காய்ச்சல் குறைந்து கொண்டிருப்பதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியும் நலம் விசாரித்துள்ளார். இதுகுறித்து அம்மாநில முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கருணாநிதியின் உடல்நிலை குறித்து மு.க.ஸ்டாலினிடம் குமாரசாமி கேட்டறிந்ததாகவும், விரைவில் நலம்பெற்று, நல்ல உடல்நிலையை பெற வாழ்த்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல கருணாநிதி விரைவில் நலம்பெற ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவும் வாழ்த்து தெரிவித்துள்ளார். மு.க.ஸ்டாலினை தொடர்புகொண்டு கருணாநிதியின் உடல்நலம் குறித்து அவர் கேட்டறிந்தார்.