தமிழ்நாடு

குலசேகரபட்டினம் தசரா திருவிழா: பக்தர்கள் இன்றி நள்ளிரவில் நடைபெற்ற சூரசம்ஹாரம்

kaleelrahman

உலகப் புகழ்பெற்ற குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் பக்தர்கள் இன்றி நள்ளிரவில் நடைபெற்றது.

தசரா திருவிழா மைசூருக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் திருச்செந்தூருக்கு அருகிலுள்ள குலசேகரபட்டினம் முத்தாரம்மன் ஆலயத்தில் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். ஆனால் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டும், இந்த முறையும் தசரா திருவிழா பக்தர்கள் இன்றி எளிமையாக நடைபெற்றது.

தசரா திருவிழாவின் 10ஆவது நாளான நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி மகிஷாசுரனை வதம் செய்தார். தொடர்ந்து வௌ;வேறு உருவங்களில் வரும் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்பின்னர் முத்தாரம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.