தமிழ்நாடு

குலசையில் காளி ஊர்வலம்

குலசையில் காளி ஊர்வலம்

webteam

துாத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் புகழ்பெற்ற முத்தாரம்மன் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு வருடமும் நடைபெறும் தசரா விழா பிரபலம். 21-ம் தேதி கொடியேற்றத்துடன் இந்த விழா துவங்கியது. பத்து நாள்கள் இந்த விழா நடைபெறும். பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் இங்கு வருவார்கள். பத்தாம் நாள் இரவு சூரனை, அம்மன் வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும்.

இந்நிலையில் நேற்று, வேம்படி இசக்கியம்மன் கோயிலிருந்து சங்கர ராமேஸ்வரர் கோயில் வரை பக்தர்கள் காளி ஊர்வலம் சென்றனர். வேண்டுதலுக்காக விரதமிருந்து, பல வேடங்களிட்டு வந்துள்ள பக்தர்கள், நள்ளிரவில் பல்வேறு வேடமணிந்து ஊர்வலத்தில் பங்கேற்றனர்.