தமிழ்நாடு

கூடங்குள அணுசக்தி தகவல்களை திருட வடகொரியா முயற்சி?: அம்பலப்படுத்திய தென் கொரியா..!

கூடங்குள அணுசக்தி தகவல்களை திருட வடகொரியா முயற்சி?: அம்பலப்படுத்திய தென் கொரியா..!

webteam

கூடங்குளம் அணு மின் நிலையத்தில் உள்ள கணினியில் இருந்து முக்கிய ஆவணங்களை திருடும் வகையில் வடகொரியாவைச் சேர்ந்த ஹேக்கர்கள் முயற்சிகள் மேற்கொண்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதனை தென் கொரியா உறுதி செய்துள்ளது.

தென்கொரியாவைச் சேர்ந்த issuemake labs என்ற தன்னார்வ அமைப்பில் பணிபுரிந்து வரும் சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் இது பற்றி வரிசையாக ட்விட்டரில் பதவிட்டுள்ளனர். அதில் அண்மையில் தமிழகத்தின் கூடங்குளம் அணு மின்நிலையத்தின் கணினி ஹேக் செய்யப்பட்ட விவகாரத்தில் வடகொரியாவுக்கு தொடர்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தோரியம் என்ற மூலப் பொருட்களை கொண்டு அணு மின் தயாரிப்பதில் இந்தியா முன்னோடியாக இருப்பதால், அது குறித்த ஆவணங்களை திருடும் பொருட்டு, இந்த முயற்சியை வடகொரியா ஹேக்கர்கள் முன்னெடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் இருந்தே ஆவணங்களை திருடுவதற்காக வடகொரியா ஹேக்கர்கள் தொடர்ந்து முயற்சித்து வருவதாகவும், அந்த ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.