தமிழ்நாடு

கூடலூர்: யுனி சைக்கிள் மற்றும் லுனி சைக்கிள்களை ஓட்டி அசத்தும் அண்ணன் தங்கை

kaleelrahman

கூடலூரில் யுனி சைக்கிள் மற்றும் லுனி சைக்கிள் ஓட்டி அசத்தும் அண்ணன், தங்கையின் திறமையை ஊர்மக்கள் பாராட்டி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள அய்யன்கொல்லி பகுதியைச் சேர்ந்தவர் பேபி. ஓவியரான இவருக்கு பரத் ரோஷன் மற்றும் வைகா ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர். அங்குள்ள தனியார் பள்ளியில் படிக்கும் இந்த இரு குழந்தைகளும் யுனி சைக்கிள் மற்றும் லுனி சைக்கிள் ஓட்டி அசத்தி வருகின்றனர்.

இந்த வகை சைக்கிள்களுக்கு ஒரு சக்கரம் மட்டுமே இருக்கும். யுனி சைக்கிள் யை பொருத்தவரைக்கும் அதில் அமர்ந்து ஓட்டுவதற்கு இருக்கை இருக்கும். லுனி சைக்கிளில் இருக்கை இருக்காது. மாறாக சக்கரத்திலேயே பெடல்கள் பொருத்தப்பட்டிருக்கும். இந்த வகை சைக்கிள்களை இயக்குவதற்கு தனித் திறன் வேண்டும்.

இந்த வகை சைக்கிள்களை இயக்குவதற்கு நீண்ட பயிற்சியும் தேவைப்படுகிறது. இந்த வகை சைக்கிள்கள் பெரும்பாலும் கடைகளில் விற்பனை செய்வது கிடையாது. இந்த நிலையில் கொரோனா காரணமாக முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போது பேபி தனது குழந்தைகளுக்கு இந்த வகை சைக்கிள்களை ஓட்ட கற்றுக் கொடுக்க முடிவு செய்தார்.

இதைத் தொடர்ந்து இந்த வகை சைக்கிள் கடைகளில கிடைக்காததால் இணையம் மூலம் தேடி இவராகவே இந்த இருவகை சைக்கிள்களையும் உருவாக்கி தனது குழந்தைகளுக்கு ஓட்டவும் பயிற்சி அளித்திருக்கிறார். இரு குழந்தைகளும் விடா முயற்சியால் காரணமாக யுனி சைக்கிள் மற்றும் லுனி சைக்கிள்களை ஓட்டி அசத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பரத் ரோஷன் இந்த இருவகை சைக்கிள்களையும் படிக்கட்டில் இயக்குவது, திண்டுகள் மீது ஓட்டுவது என சாகசங்களும் புரிந்து வருகிறார்.

;.