KS.alagiri
KS.alagiri pt desk
தமிழ்நாடு

“டெல்லியில் மல்யுத்த வீரர்களை தாக்கிய அன்றே மோடியின் செங்கோல் வளைந்து விட்டது” - கே.எஸ்.அழகிரி

webteam

சென்னையை அடுத்த குன்றத்தூர் பகுதியில் காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சி வர்த்தக பிரிவின் மாவட்ட தலைவர் VLC ரவி என்பவரின் இல்ல நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டிருந்தார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசிய போது, “மோடி அவர்கள், நாடாளுமன்றத்தில் ஒரு செங்கோல் வைத்திருக்கிறார். தமிழகத்தில் இருந்து சென்ற செங்கோல் அது. செங்கோல் என்பது மன்னர் ஆட்சியின் சின்னமாகும். நாம் மன்னராட்சியை ஒதுக்கி விட்டோம்.

புதிய நாடாளுமன்ற கட்டடம்

மக்களாட்சி வேண்டுமென்று சொல்லி இருக்கிறோம். ஆனால், மன்னராட்சி மிச்சத்தை செங்கோல் என்று அவர்கள் கொண்டு போய் கொடுப்பதும் அது ஏதோ கிடைப்பதற்கு அரியது என்று பாஜகவினர் பேசுவதும் வியப்பாக இருக்கிறது.

அப்படியே பார்த்தாலும், இந்தியாவின் மாபெரும் மல்யுத்த வீரர்கள் காவல் துறையால் அடித்து நசுக்கப்பட்டு தூக்கி எறியப்பட்டு இருக்கிறார்கள். அன்றைக்கே அந்த செங்கோல் வளைந்து விட்டது. பாண்டிய நெடுஞ்செழியனின் செங்கோல் எப்படி வளைந்ததோ, அதுபோல இவர்கள் செங்கோலும் வளைந்து விட்டது.

மல்யுத்த வீரர்கள்

நேருவுக்கு கொடுத்த செங்கோலை கண்காட்சிக்கு வைத்து விட்டார்கள். விரும்பிக் கொடுத்த செங்கோலை நேரு கண்காட்சியில் வைத்துவிட்டார்” என்றார்.

PM Modi

தொடர்ந்து அவரிடம் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் ‘2024-ல் சிஎஸ்கே போல் பாஜக வெற்றியடையும்’ என்ற கருத்து குறித்து கேட்டதற்கு, ‘பாத்துக்கலாம் பாத்துக்கலாம்’ என பதிலளித்துச் சென்றுள்ளார்.