தமிழ்நாடு

படுக்கை வசதி பெற ஆம்புலன்ஸிலேயே 4 மணி நேரம் காத்திருந்து உயிரிழந்த கிருஷ்ணகிரி இளைஞர்

படுக்கை வசதி பெற ஆம்புலன்ஸிலேயே 4 மணி நேரம் காத்திருந்து உயிரிழந்த கிருஷ்ணகிரி இளைஞர்

kaleelrahman

கிருஷ்ணகிரி; அரசு மருத்துவமனையில் படுக்கை வசதிக்காக காக்க வைக்கப்பட்ட இளைஞர் ஆம்புலன்ஸ்லேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ராஜாஜி நகரைச் சேர்ந்த பிரேம்குமார் என்பவர் கடந்த ஐந்து நாட்களாக தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், மேல் சிகிச்சைகாக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.

ஆனால் அரசு மருத்துவமனையில் போதிய படுக்கைகள் இல்லாததால், சுமார் நான்கு மணிநேரமாக ஆம்புலன்ஸ்லேயே காத்திருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ஆம்புலன்ஸில் இருந்த சிலிண்டரில் ஆக்சிஜன் காலியானதால் பிரேம்குமார் மூச்சுவிட முடியாமல் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.