பெண் குழந்தையை தென்னந்தோப்பில் வீசிச் சென்ற அவலம் pt desk
தமிழ்நாடு

கிருஷ்ணகிரி | தொப்புள் கொடியோடு பெண் குழந்தையை தென்னந்தோப்பில் வீசிச் சென்ற அவலம்!

கிருஷ்ணகிரி அருகே தென்னந்தோப்பில் தொப்புள் கொடியுடன் கிடந்த பெண் குழந்தை. போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

PT WEB

செய்தியாளர்: அரிபுத்திரன்

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அடுத்த மத்தூர்பதி கிராமத்தைச் சேரந்தவர் குமார். மெடிக்கல் நடத்தி வரும் இவர் ஒரு விவசாயி. இந்நிலையில் இவர், தனது தென்னந்தோப்பை வழக்கம்போல் சுற்றிப் பார்த்துள்ளார் அப்போது குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. இதையடுத்து சப்தம் வந்த இடத்தை நோக்கிச் சென்ற அவர் பார்த்தபோது, அவருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.

ஒரு தென்னை மரத்தின் கீழ் பச்சிளம் பெண் குழந்தை கிடந்துள்ளது. அப்போதுதான் அறுபட்ட தொப்புள் கொடியுடன் பச்சிளம் குழந்தை அழுது கொண்டிருந்தது. இதை கவனித்த குமார், குழந்தையை அப்படியே தூக்கி சுத்தப்படுத்தி, மத்தூர் காவல் துறைக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், குழந்தையை மத்தூர் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் குழந்தை பிறந்து 2 மணி நேரம் தான் ஆகிறது என்ற அதிர்ச்சி தகவலையும் தெரிவித்தனர். இதையடுத்து குழந்தையை வீசிச்சென்ற பெண்மணி யார் என்பது குறித்து மத்தூர் போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.