தமிழ்நாடு

கிருஷ்ணகிரி: கார் கண்ணாடியை உடைத்து ரூ. 19.30 லட்சம் கொள்ளை

கிருஷ்ணகிரி: கார் கண்ணாடியை உடைத்து ரூ. 19.30 லட்சம் கொள்ளை

kaleelrahman

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த காரின் கண்ணாடியை உடைத்து 19 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது.

பெங்களூரைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் ஓசூர் அருகேயுள்ள தனது நிலத்தை விற்று அதன் மூலம் கிடைத்த பணத்தின் ஒரு பகுதியுடன் தனது காரில் திரும்பினார். அப்போது தேன்கனிக்கோட்டை சாலையில் ஒரு உணவகத்தின் முன் காரை நிறுத்திவிட்டு, குடும்பத்துடன் உணவருந்தச் சென்றுள்ளார்.

இந்த தருணத்தை பயன்படுத்தி அடையாளம் தெரியாத நபர்கள், ராமச்சந்திரனின் கார் கண்ணாடியை உடைத்து, உள்ளேயிருந்த 19 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர். இச்சம்பவம் குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.