செய்தியாளர் - ம.ஜெகன்நாத்
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே உள்ள மாவநட்டி கிராமத்தைச் சேர்ந்த சிவராஜ் மஞ்சு தம்பதியினரின் இளைய மகன் ரோகித் (13). அங்குள்ள அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு பயிற்று வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை 4 மணி அளவில் மர்மநபர்களால் கடத்தப்பட்டுள்ளார்.
இதுகுறித்து பெற்றோர் மற்றும் கிராம மக்கள் அஞ்சட்டி காவல் நிலையத்தில் நேற்று இரவே புகார் தெரிவித்துள்ளனர். இருப்பினும் நடவடிக்கை தாமதமானதாக பெற்றோர் தரப்பில் கூறப்படுகிறது. இதனிடையே கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் அதேப் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் பெற்றோர் அளித்த புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாகவும் கடத்தப்பட்ட சிறுவன் குறித்து எந்த தகவலும் இதுவரை இல்லை எனக் கூறி ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் கிராம மக்கள் அஞ்சட்டி பேருந்து நிலையத்தில் சாலையில் அமர்ந்து சிறுவனை கண்டுபிடித்து தர கோரி இன்று காலை அஞ்செட்டி பேருந்து நிலையத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது சிறுவனின் உடல் வனப்புகளில் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து மறியலில் ஈடுபட்டு இருந்தவர்களும் மற்றும் போலீசார் அஞ்செட்டியில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வனப்பகுதிக்கு விரைந்தனர். அங்கு கொண்டை ஊசி வளைவு பகுதியில் உடல் வீசப்பட்டிருந்தது. சடலத்தை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்திய வருகின்றனர். மேலும் ஐந்து பேரை பிடித்து சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அஞ்சடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.