‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட பட்டுக்கோட்டை பகுதிக்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து ரூ 25 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை மாவட்ட ஆட்சியர் பிரபாகர் அனுப்பி வைத்தார்.
தமிழகத்தில் ‘கஜா’ புயலால் நாகை, புதுக்கோட்டை, திருவாரூர்,தஞ்சை, கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. ஏராளமான பயிர்களும், வீடுகளும், பொருட்களும் சேதம் அடைந்தன. கஜா புயலால் வாழ்வாதாரத்தை இழந்து, உணவு, தண்ணீர், இருப்பிடம் இன்றி தவிக்கும் மக்களுக்கு தமிழகத்தின் பிறமாவட்டங்களில் இருந்து நிவாரணப் பொருட்கள் சேகரித்து, பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரணப் பொருட்களாக வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சமூக ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள், வணிகர்கள் ஆகியோர் ‘கஜா’புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் ஏராளமான பொருட்களை மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கி வருகின்றனர். அவற்றினை பெற்று லாரிகள் மூலம் பாதிக்கபட்ட பகுதிகளுக்கு அனுப்பபடுகிறது. அதன்படி இன்று இரண்டு லாரிகள் மூலம் ஆவின் பால் பவுடர், பெட்சீட் ,துண்டு, தண்ணீர் பாட்டில்கள், நாப்கின், அரிசி முட்டைகள்,பாத்திரபண்டங்கள், கொசு வர்த்தி,மருந்துகள் என ரூ 25 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை புயலால் பாதிக்கப்பட்ட பட்டுக்கோட்டை பகுதிக்கு மாவட்ட ஆட்சியர் பிரபாகர் வருவாய் அலுவலர் சாந்தி ஆகியோர் கொடி அசைத்து அனுப்பி வைத்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து முதல்கட்டமாக இரண்டு லாரிகளில் நிவாரணப் பொருட்கள் சேகரித்து அனுப்பபட்டு உள்ளது. தொடர்ந்து பொதுமக்களிடம் பொருட்கள் பெறபட்டு அவற்றை அடுத்தடுத்து அனுப்பபடும் என்றும் பொதுமக்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்யுமாறும் மாவட்ட ஆட்சியர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.