தமிழ்நாடு

கிருஷ்ணகிரி அணையில் மதகு உடைந்தது: தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம்

கிருஷ்ணகிரி அணையில் மதகு உடைந்தது: தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம்

webteam

கிருஷ்ணகிரி அணையின் பிரதான மதகின் கதவு உடைந்து தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி கேஆர்பி அணையின் பிரதான மதகின் கதவு தண்ணீர் அழுத்தம் காரணமாக உடைந்தது. இதனால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. அத்துடன் கிருஷ்ணகிரி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களிலும் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெள்ளப்பெருக்கு குறித்து காவேரிப்பட்டினம், இருமத்தூர், ஊத்தங்கரை, அரூர் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு அதிகாரிகள் நேரில் சென்று அறிவுறுத்தி வருகின்றனர். கிருஷ்ணகிரி அணை மதகின் கதவு துருப்பிடித்திருந்ததால்தான் தண்ணீர் அழுத்தத்தில் உடைந்து விழுந்ததாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். தொடர் மழையால் கிருஷ்ணகிரி அணையின் நீர்மட்டம் முழு கொள்ளவான 52 அடியை எட்டியிருந்த நிலையில், தற்போது மதகின் கதவு உடைந்துள்ளது. இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார்.