தமிழ்நாடு

விவசாயிக்கு கடன் தர மறுக்கும் வங்கி நிர்வாகம்

விவசாயிக்கு கடன் தர மறுக்கும் வங்கி நிர்வாகம்

webteam

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சொந்த நிலம் இருந்தும் வங்கியில் கடன் தர மறுக்கிறார்கள் என்று விவசாயி கவலை தெரிவித்துள்ளா‌ர்.

ஓசூர் அடுத்த அலேசீபம் கிராமத்தை சேர்ந்த ஹேமந்த் குமார், நிலத்தை அடமானம் வைத்து இந்தியன் வங்கி கிளையில் 40 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றதாக தெரிகிறது. 2016ஆம் ஆண்டு கடன் தொகை முழுவதையும் திருப்பி செலுத்திய நிலையில்,வங்கி நிர்வாகம் மீண்டும் கடன் தர மறுப்பதாகவும், கடன் பத்திரத்தை திரும்பத்தர முடியாது என்று கூறுவதாகவும் புகார் தெரிவிக்கிறார்.தன்னுடன் இணைந்து சுய உதவிக்குழுவில் பணம் பெற்ற சிலர், அவற்றை செலுத்தவில்லை என கூறி தனக்கு கடன் மறுக்கப்படுவதாக விவசாயி கூறினார்.

விவசாயி ஹேமந்த் குமார் தனது நிலத்தில் பட்டு புழு கூடு வளர்த்தும், அதற்கு தீவனமாக அதே நிலத்தில் மல்பேரியன் செடிகளையும் வளர்த்து விவசாயம் செய்து வருகிறார். இதில் 3 லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறும் இவர்,வங்கியில் இருந்து பத்திரத்தை பெற மாவட்ட நிர்வாகம் உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.