10 அடி நீளம் கொண்ட 6 மலைப்பாம்புகள் பத்திரமாக மீட்பு pt desk
தமிழ்நாடு

கூட்டமாக கிராமத்திற்குள் புகுந்த 10 அடி நீளம் கொண்ட 6 மலைப்பாம்புகள்.. கிருஷ்ணகிரியில் திக்.. திக்!

கிருஷ்ணகிரி அடுத்த சவுட்டஅள்ளி கிராமத்தில் புகுந்த 10 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு கூட்டத்தை பத்திரமாக பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்த தீயணைப்பு துறையினர்.

PT WEB

செய்தியாளர்: ஜி.பழனிவேல்

கிருஷ்ணகிரி அருகே உள்ள சவுட்டஅள்ளி கிராமத்திற்குள் ஏராளமான பாம்புகள் கூட்டமாக புகுந்துள்ளதாக அப்பகுதியைச் சேர்ந்த வேலு என்பவர் கிருஷ்ணகிரி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். தகவலின் அடிப்படையில் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக அந்த கிராமத்துக்குச் சென்று மலைப் பாம்புகளை தேடினர்.

அப்போது ஈஸ்வரன் கோயில் அருகே புதருக்குள் இருந்த மலைப்பாம்புகளை பத்திரமாக மீட்டனர். சுமார் 10 அடி நீளம் கொண்ட 6 மலைப்பாம்புகள் அந்த பகுதியில் இருந்து மீட்கப்பட்டது. இதனை அடுத்து மீட்கப்பட்ட 6 மலைப் பாம்புகளையும் தீயணைப்புத் துறையினர் பத்திரமாக கிருஷ்ணகிரி வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் கிராமத்திற்குள் புகுந்த 6 மலைப்பாம்புகள் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.