தமிழ்நாடு

கட்சிகாரர்களையே தாக்குபவர்கள் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பார்களா?: கே.பி. முனுசாமி

கட்சிகாரர்களையே தாக்குபவர்கள் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பார்களா?: கே.பி. முனுசாமி

webteam

சொந்த கட்சிகாரர்களையே தாக்குபவர்கள் சட்டம் ஒழுங்கை எப்படி பாதுகாப்பார்கள் என பன்னீர்செல்வம் ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இல்லம் அருகே அவரின் ஆதரவாளர்களுக்கும், சி.வி.சண்முகம் ஆதரவாளர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்த கே.பி. முனுசாமி, கட்சிகாரர்களையே தாக்குபவர்கள் சட்டம் ஒழுங்கை எப்படி பாதுகாப்பார்கள் என கேள்வி எழுப்பினார். சசிகலா குடும்பத்தை எதிர்த்து தர்ம யுத்தத்தை தொடங்கி இருப்பதாக கூறிய அவர், அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்.. வன்முறையை தொடரவேண்டாம் என்றும் தெரிவித்தார்.

மேலும், ஒரு சில சட்டமன்ற உறுப்பினர்கள் தான் சசிகலா பக்கம் இருப்பதாக கூறிய அவர், ஆனால் கோடிக்கணக்கான அதிமுக தொண்டர்கள் ஓ.பன்னீர்செல்வம் பின்னால் உள்ளதாகவும் தெரிவித்தார்.