தமிழ்நாடு

கோத்தகிரி: காரை தூக்கி எறிய முற்பட்ட காட்டு யானை.. அச்சத்தில் உறந்த வாகன ஓட்டிகள்!

webteam

கோத்தகிரி மேட்டுப்பாளையம் செல்லும் நெடுஞ்சாலையில் வாகனத்தை காட்டு யானை தாக்கியதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளிலும் தேயிலை தோட்டங்களிலும் சாலைகளிலும் உலவுகின்றன.

இந்நிலையில், கோத்தகிரி - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள முள்ளூர் பகுதியில் ஒற்றை யானை நள்ளிரவில் சாலையில் நீண்ட நேரமாக உலவியது. இதனால் 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன,

இதில், ஒரு சிலர் யானையை புகைப்படம் எடுக்கும் முற்பட்டதால் திடீரென யானை 5 மேற்பட்ட வாகனங்களை சேதப்படுத்தியது, மேலும் யானையை முந்திச் சென்ற வாகனத்தை கண்ணாடியை சேதப்படுத்தியதோடு அங்கு நிறுத்தியிருந்த காரை தூக்கி எறிய முற்பட்டது.

இதைத் தொடர்ந்து சிறிது நேரம் கழிந்து அருகில் உள்ள தேயிலை தோட்டத்திற்குள் காட்டுயானை சென்றதால் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்தனர். இதன் காரணமாக வாகனங்கள் ஆங்காங்கே சிறிது நேரம் நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.