தமிழ்நாடு

கொளத்தூர்: 50 ஆண்டுகளாக வசித்த வீடுகளை இடித்த அரசை கண்டித்து 3வது நாளாக போராட்டம்

kaleelrahman

கொளத்தூர் அவ்வை நகரில் 50 ஆண்டுகளாக வசித்து வரும் மக்களின் வீடுகளை இடித்ததை கண்டித்து 3வது நாளாக போராடி வருகின்றனர்.

முதல்வர் தொகுதியான கொளத்தூரில் உள்ள அவ்வை நகரில் உரிய கால அவகாசம் வழங்காமலும், மாற்று இடம் ஒதுக்கீடு செய்யாமலும் 50-க்கும் மேற்பட்ட வீடுகளை மேம்பாலம் திட்டத்திற்காக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சில நாட்களுக்கு முன் இடித்துள்ளனர்.

இதற்கு எதிரிப்பு தெரிவித்து அவ்வை நகர் பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில், குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்று வருகின்றனர்.

இந்நிலையில் முதல்வர் வந்தால் வாழ்வு கிடைக்கும் என்று நினைத்தோம். ஆனால், எங்கள் வாழ்வை அழித்து விட்டார் பாலம் கட்ட 5 அடி எடுக்க போகிறோம் என்று கூறி விட்டு முழு வீட்டுடையும் இடித்து விட்டார்கள். இடிப்பதற்கு முன்பாக எந்த தகவலும் கூறவில்லை. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் காவலர்களுடன் வந்து வீட்டை இடித்து விட்டார்கள். எங்களிடம் பேச்சுவார்த்தை கூட நடத்தவில்லை என்றனர்.

இந்த பகுதி மக்களுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆதரவாக இருந்து வரும் நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் குரல் கொடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட சில தலைவர்களை சந்தித்து ஆதரவு கேட்டுள்ளனர்.