சென்னை கொடுங்கையூரில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழப்பு 10 ஆக அதிகரித்துள்ளது.
தீ விபத்தில் படுகாயமடைந்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கொடுங்கையூரைச் சேர்ந்த நரேஷ் என்பவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். முன்னதாக, கடந்த 15 ஆம் தேதி கொடுங்கையூரிலுள்ள பேக்கரியில் நடந்த தீ விபத்தில் பலர் படுகாயமடைந்தனர். தீயை அணைக்க வந்தபோது சிலிண்டர் வெடித்ததில் தீயணைப்பு வீரர் ஏகராஜ் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்தவர்களில் இதுவரை பரமானந்தம், அபிமன்யூ, கடை உரிமையாளர் ஆனந்த் உள்ளிட்ட பத்து பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் படுகாயமடைந்து தீவிர சிகிச்சை பெற்று வந்த 14 பேரில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.