தமிழ்நாடு

கொடுங்கையூர் தீ விபத்து: முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு

கொடுங்கையூர் தீ விபத்து: முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு

Rasus

கொடுங்கையூர் பேக்கரி‌‌யில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த தீயணை‌ப்பு வீரரின் குடும்பத்திற்கு 13 லட்ச ரூபாய் நிவாரண‌‌ம் வழங்கி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தீ விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயி‌ரம் ரூபாயும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாயும் ‌வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த தீயணைப்பு வீரர் ஏகராஜின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கொடுங்கையூரில் புதிதாக திறக்கப்பட்ட பேக்கரியில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட போது, அதிகப்படியான தீ ஜூவாலை தாக்கியதில் விருதுநகரைச் சேர்ந்த தீயணைப்பு வீரர் ஏகராஜ் படுகாயமடைந்து மருத்துவமனையில் உயிரிழந்தார். தொடர்ந்து தீயை கட்டுப்படுத்த முயற்சிகள் நடைபெற்ற போது, யாரும் எதிர்ப்பாராத வகையில் பேக்கரிக்குள் இருந்த எரிவாயு சிலிண்டர் வெடித்தது. அதில், மீட்புப்பணியில் இருந்த 8 பேர் மட்டுமின்றி, கடை முன் குவிந்தவர்கள் பலரும் தீக்காயம் அடைந்தனர். இவர்கள் கீழ்ப்பாக்கம் மற்றும் ஸ்டாலின் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களை முதலமைச்சர் பழனிசாமி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது நிதியமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.