தமிழ்நாடு

கோதண்டராமர் சிலையை கொண்டு செல்ல தற்காலிக பாலம் - தொடரும் சிக்கல்

கோதண்டராமர் சிலையை கொண்டு செல்ல தற்காலிக பாலம் - தொடரும் சிக்கல்

webteam

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே கொரக்கோட்டை மலையில் இருந்து 380 டன் எடைக்கொண்ட ஒரே கல்பாறையில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டுது கோதண்டராமர் சிலை.   கடந்த டிசம்பர் 7ம்தேதி முதல் மிகபெரிய கார்கோ லாரியில் பெங்களூர் ஈஜிபுரா பகுதிக்கு எடுத்து செல்லப்பட்டு வருகிறது. கடந்த ஜனவரி 31ம்தேதி கோதண்டராமர் சிலை கிருஷ்ணகிரிக்கு வருகை தந்தது. அங்கிருந்து பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இணைந்து கே.திப்பனபள்ளி என்கிற இடத்தில் கோதண்டராமர் சிலை வாகனம் நிறுத்தபட்டது. 

அதிக எடை கொண்ட கோதண்டராமர் சிலை வாகனம் சென்றால் பாலம் சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கருதப்பட்டதால், குருபரப்பள்ளி என்னும் இடத்தில் உள்ள மார்கண்டேயன் ஆற்றுபாலத்தை கடப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனையடுத்து ஆற்றின் தடுவே தற்காலிக மண் சாலை அமைக்கும் பணி கடந்த நான்கு நாட்களாக நடைபெற்று வருகிறது. 100 மீட்டர் நீளத்திற்கு 10 அடி உயரத்திற்கு மண் சாலை அமைக்கபட்டு இன்று கோதண்டராமர் சிலை வாகனம் இயக்கப்பட்டது அப்போது மண் சாலையில் பிடிப்பு இல்லாததால் இழுவை வாகனத்தின் சக்கரம் சுற்றியது. இதனால் நடு ஆற்றில் சாமி சிலை வாகனம் நிறுத்தப்பட்டது. 

தொடர்ந்து முன்னே செல்ல முடியாததால் வாகனம் பின்னால் இழுக்கப்பட்டது. இதனால் சாமி சிலை செல்வது ஈஜிபுரா செல்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது தற்போது தற்காலிக மண் சாலையை கற்கள் மண் இணைத்து போடும் பணி நடைபெற்று வருகிறது. நாளை மீண்டும் அந்த வழியாக வாகனத்தை இயக்க திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ள கோதண்டராமர் சாமி சிலையை நாள்தோறும் ஏராளமான மக்கள் பொதுமக்கள் வந்து பார்த்துச் செல்கின்றனர்.