கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா, இளவரசி உள்ளிட்டோரை விசாரிக்க அனுமதி மறுத்த நீலகிரி நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது.
குற்றம்சாட்டப்பட்டுள்ள தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர் கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுத் தாக்கல் செய்திருந்தனர். வெளிப்படையான விசாரணை மேற்கொள்ளவில்லை என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி நிர்மல்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது.