தமிழ்நாடு

கோடநாடு கொலை: கேரளாவில் சிக்கினார் கொலையாளி

கோடநாடு கொலை: கேரளாவில் சிக்கினார் கொலையாளி

webteam

ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட் காவலாளி ஓம் பகதூர் கொலை தொடர்பாக கேரளாவில் ஒருவர் சிக்கினார்.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட் உள்ளது. பலத்த பாதுகாப்பு நிறைந்த இந்த எஸ்டேட்டில் கடந்த 24-ம் தேதி நடந்த கொள்ளை முயற்சியில் காவலாளி ஓம் பகதூர் என்பவர் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் மற்றொரு காவலாளியான கிருஷ்ண பகதூர் காயமடைந்தார்.

இது தொடர்பாக கோத்தகிரி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. எஸ்பி முரளிரம்பா தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வந்தது. இந்தக் கொலை தொடர்பாக தற்போது கேராளாவைச் சேர்ந்த ஒருவரை தனிப்படையினர் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில், அளக்கரை அருகே உள்ள ஒரு சொகுசு பங்களாவில், கொள்ளை குறித்து திட்டம் தீட்டியதாகவும், கோடநாடு எஸ்டேட் பங்களா அருகே பதுங்கி இருந்து பல நாட்கள் உளவு பார்த்ததாகவும் தெரிய வந்துள்ளது. மேலும் அவரிடம் ஆவணங்கள், நகைகளை எடுத்துச் செல்ல கொள்ளை நடத்தப்பட்டதா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.