தமிழ்நாடு

கொடநாடு சொத்து விவரம் என்ன? பீட்டர் ஜோன்ஸ் இன்று ஆணையத்தில் ஆஜர்

webteam

கொடநாடு எஸ்டேட் முன்னாள் உரிமையாளர் பீட்டர் ஜோன்ஸ் இன்று ஆறுமுகசாமி ஆணைத்தில் நேரில் ஆஜராக உள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக, ஆறுமுகசாமி ஆணையம் ஜெயலலிதாவின் உறவினர்கள், நண்பர்கள், பணியாளர்கள் என அனைவருக்கும் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருகிறது.

அந்த வகையில் நேற்று முன்னாள் அமைச்சர் பொன்னையனிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில், கொடநாடு எஸ்டேட் முன்னாள் உரிமையாளர் பீட்டர் ஜோன்ஸ் இன்று ஆறுமுகசாமி ஆணைத்தில் நேரில் ஆஜராக உள்ளார். இவருக்கான சம்மன் ஏற்கனவே கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் இதுகுறித்த தகவல்கள் வெளியே வராமல் பாதுகாக்கப்பட்டு வந்தது.

ஏனெனில் சில சாட்சியங்களை ரகசியமாக பதிவு செய்ய வேண்டும் என விசாரணை ஆணையம் நினைக்கிறது. அந்த சாட்சியங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்னதாக கொடநாடு வங்கி மேலாளரிடம் விசாரணை ஆணையம் விசாரணை நடத்தியது. மேலும் கொடநாடு ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றனிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

கொடநாடு எஸ்டேட் 1999 ஆம் ஆண்டு வரை பீட்டர் ஜோன்ஸிடமே இருந்தது. இதனிடையே 9 கோடி ரூபாய் மதிப்புள்ள கொடநாடு எஸ்டேட்டை ஜெயலலிதா தரப்பு அடியாட்களை வைத்து தம்மை மிரட்டி 7 கோடி ரூபாய்க்கு வாங்கி கொண்டதாக பீட்டர் ஜோன்ஸ் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில், கொடநாடு எஸ்டேட் முன்னாள் உரிமையாளர் பீட்டர் ஜோன்ஸ் இன்று ஆறுமுகசாமி ஆணைத்தில் நேரில் ஆஜராக உள்ளார். அவரிடம் கொடநாடு சொத்து விவரம் குறித்து விசாரிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே எய்ம்ஸ் மருத்துவர்கள் 2 பேர் இன்று ஆணையத்தில் ஆஜராகி உள்ளனர்.