சென்னையில் கோடம்பாக்கம் மண்டலத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 122 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது
தமிழகத்தில் நாளுக்குநாள் கொரோனா வைரஸ் அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் தமிழகத்தில் 600 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6006 ஆக உயர்ந்துள்ளது.
அத்துடன் சென்னையில் மட்டும் நேற்று 399 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மொத்தம் 3043 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் சென்னையில் மண்டல வாரியாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, கோடம்பாக்கத்தில் அதிகபட்சமாக 546 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கோடம்பாக்கத்தில் நேற்று ஒரே நாளில் 122 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இராயபுரத்தில் 490 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.