தமிழ்நாடு

காட்டெருமை மீது மோதிய பைக் : கோபத்தில் இருவரை முட்டிய காட்டெருமை!

காட்டெருமை மீது மோதிய பைக் : கோபத்தில் இருவரை முட்டிய காட்டெருமை!

webteam

கொடைக்கானல் அருகே காட்டெருமை தாக்கியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் படுகாயமடைந்தனர். 

கொடைக்கானல் அருகே உள்ள மங்களம்கொம்பு கிராமத்தில், பள்ளி ஆசிரியர்களாக பணியாற்றி வருபவர்கள் சுருளிமுத்து மற்றும் முத்துப்பாண்டி. இவர்கள் இருவரும் இரண்டு சக்கர வாகனத்தில் வத்தலக்குண்டு சென்றுள்ளனர். தீனிக்கொடை என்ற பகுதியில் சென்றபோது, சாலை ஓரம் இருந்த புதர்களுக்குள் இருந்து திடீரென்று காட்டெருமை வெளியே ஒடி வந்துள்ளது. 

காட்டெருமையை கண்ட அவர்கள் அதிர்ச்சியடைந்து, இருசக்கர வாகனத்தை நிதானம் தவறி அதன்மீது மோதியுள்ளனர். இதில் கோபமடைந்த காட்டெருமை அவர்கள் இருவரை முட்டி, கடுமையாக தாக்கியுள்ளது. காட்டெருமை முட்டியதில் இருவரும் பள்ளத்தாக்கிற்குள் தூக்கி வீசப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்த இருவரும், வத்தலக்குண்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.