தமிழ்நாடு

"உயிர்கள் சாகிறது; காட்டுத்தீயில் இருந்து கொடைக்கானலை காப்பாத்தணும்" - கார்த்தி வேண்டுகோள்

kaleelrahman

கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக ஏற்பட்ட காட்டுத் தீ பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, அனைவரும் விரும்பும் மலைகளில் இளவரவரசியை காக்க முன்வரவேண்டும் என நடிகர் கார்த்தி காணொளி வெளியிட்டுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக பெருமாள்மலை வனப்பகுதியில் கடுமையான காட்டுத்தீ ஏற்பட்டது. இரண்டு நாட்களாக தொடர்ந்து எரிந்த தீயை வனத்துறை 90 சதவிகிதம் கட்டுப்படுத்தி வனத்தை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையறிந்த நடிகர் கார்த்திக், காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கொடைக்கானலில் ஏற்பட்ட காட்டுத்தீயால் தாவரங்கள், வன விலங்குகள் உள்ளிட்டவைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அனைவரும் விரும்பும் கொடைக்கானல் மலைப்பகுதியை காட்டுத்தீயில் இருந்து காக்க கவனமாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த காணொளி சமூக வலைதலங்களில் வேகமாக பரவி வருகிறது.