வேலூரில் விஸ்வாசம் படம் பார்த்த இரண்டு பேர் மீது கத்திக் குத்து தாக்குதல் நடத்தப்பட்டது.
வேலூர் அலங்கார் திரையரங்கில் நள்ளிரவு 1.30 மணிக்கு அஜித் நடித்த விஸ்வாசம் படத்தின் சிறப்புக் காட்சி வெளியானது. இந்தப் படத்தைப் பார்க்க ஏராளமான அஜித் ரசிகர்கள் உள்ளிட்டோர் குவிந்தனர். காட்பாடி தாராப்படவேடு பகுதியை சேர்ந்த பிரசாந்த் (18), அவரது மாமா ரமேஷ்(30) ஆகிய இருவரும் படம் பார்க்க சென்றுள்ளனர்.
இந்நிலையில், பிரசாந்த், ரமேஷ் ஆகிய இருவர் மீது அடையாளம் தெரியாத நபர்கள் கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றனர். படுகாயம் அடைந்த இருவரும் ஆபத்தான நிலையில் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சீட்டு பிடிக்க ஏற்பட்ட தகராறில் 4 பேர் கொண்ட கும்பல் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் தொடர்பாக வேலூர் தெற்கு காவல் துறையினர் விசாரணை செய்து 4 பேரை தேடி வருகின்றனர்.