தமிழ்நாடு

கோலாகலமாக நடைப்பெறும் கோவை பட்டம் விடும் திருவிழா

webteam

கோவையில் பட்டம் விடும் திருவிழாவில் ஏராளமானோர் ஆர்வமுடன் பங்கேற்று வண்ண வண்ண பட்டங்களை பறக்க விட்டனர்.

பட்டம் விடும் திருவிழா ஆண்டுதோறும் கோலாகலமாக கோவையில் கொண்டாடப்பட்டு வருகிறது. சிறியவர் முதல்  பெரியவர் வரை  வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரும் பட்டம் விட விரும்புவர். ஆனால் தற்போது நகர்ப்புற நெருக்கடி மற்றும் இடப்பற்றாக்குறை காரணமாக பட்டம் விடுவது என்பதே அரிதாகிவிட்டது. இதையடுத்து, நாம் இழந்து விட்ட மகிழ்ச்சியை மீட்டெடுக்கும் விதமாகவும்,விதவிதமான ஒவ்வொரு ஆண்டும் தனியார் நிறுவனம் சார்பில் கோவையில் பட்டம் விடும் திருவிழா நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று இந்த ஆண்டிற்கான பட்டம் விடும் திருவிழா கோவையை அடுத்த ஆர் எஸ் புரம் பகுதியில்  நடைபெற்றது. இந்தப் பட்டம் விடும் திருவிழாவில் கலந்து கொண்டவர்களுக்கு அழகிய வண்ண பட்டம் வழங்கப்பட்டது.

சர்வதேச அளவில் பட்டம் விடும் நிபுணர்களின்  நேரடி ஆலோசனையில் பட்டங்களைப் பறக்க விட்டனர். அத்துடன் வண்ணமயமான ராட்சச பட்டம் மற்றும் 300 பட்டங்களைக் கொண்ட சங்கிலித்தொடர் பட்டம்,விசிலடிச்சான் பட்டம், டிராகன் பட்டம், மிருகங்களின் வடிவிலான பட்டம் உள்பட பல்வேறு பட்டங்களை நிபுணர்கள் பறக்கவிட்டனர். இந்தத் திருவிழா இரண்டு நாட்களுக்கு நடைபெறுகிறது. தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக நடைபெறும் இந்தப் பட்டம் விடும் விழாவில் கலந்து கொள்ள கட்டணம் எதுவும் இல்லை.