நெல்லை அருகே கோவிலுக்குள் புகுந்த ராஜநாகத்தை வனத்துறையினர் பிடித்தனர்.
நெல்லை மாவட்டம் பண்பொழி அருகே உள்ள பிரசித்திபெற்ற மலைக்கோவிலான திருமலைக் கோவிலில் 12 அடி நீளமுள்ள ராஜ நாகம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, கோவிலுக்கு கூட்டம் கூட்டமாக பொதுமக்கள் வரத்தொடங்கினர். பின்னர், தேசிய இயற்கை பாதுகாப்பு குழுவை சேர்ந்த சேக் என்பவரின் உதவியுடன், வனத்துறையினர் ராஜ நாகத்தை பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.