பொங்கல் பண்டிகை முகநூல்
தமிழ்நாடு

நெருங்கும் பொங்கல் பண்டிகை; சொந்த ஊர்களுக்கு செல்ல நிரம்பி வழியும் மக்கள் கூட்டம்!

பொங்கல் பண்டிகை வரும் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட உள்ளதால், பலரும் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.

PT WEB

பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில், வெளியூர்களில் வசிப்பவர்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுள்ளதால் பேருந்து நிலையங்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

பொங்கல் பண்டிகை செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட உள்ளதால், பலரும் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதால், நேற்று மாலை ஏராளமான பயணிகள் குவிந்தனர்.

நள்ளிரவிலும் பயணிகள் கூட்டம் அதிகம் இருந்தது. முன்பதிவு இல்லாமல் இயக்கப்படும் பேருந்துகள் கால தாமதமாக வந்ததால் பயணிகள் சிரமத்துக்கு ஆளாகினர்.