ஊழல் விவகாரத்தில் ஊருக்குத்தான் உபதேசமா? என பாரதிய ஜனதாவுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
மற்ற கட்சிகளை ஊழல்வாதிகள் என்று கூறி பதவி விலகிடச் சொல்லும் பாரதிய ஜனதா, பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றப் பதிவு செய்யப்பட்டுள்ள மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி, ராஜஸ்தான் மாநில ஆளுநர் கல்யாண் சிங் ஆகியோரை பதவி விலகச் சொல்லாதது ஏன் என கி.வீரமணி வினவியுள்ளார்.
மற்ற கட்சிகளுக்கு உபதேசம் செய்யும் பிரதமர் நரேந்திர மோடி, கல்யாண் சிங்கையும், உமாபாரதியையும், அவர்களின் பதவிகளில் இருந்து ராஜினாமா செய்ய உத்தரவு பிறப்பிக்காதது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். வெள்ளி விழா கண்டுள்ள பாபர் மசூதி வழக்கில், குற்றவாளிகள் தப்பிவிடாமல் தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.