தமிழ்நாடு

ரேஷன் அட்டைதாரர்‌களுக்கு குறைகிறது மண்ணெண்ணெய் அளவு..!

Rasus

தமிழ்நாட்டுக்கான மண்ணெண்ணெய் ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளதால், ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவும் குறைக்கப்பட உள்ளது.

மாநிலத்தின் மொத்த தேவையில் தற்போது 24 சதவிகித மண்ணெண்ணெய் மட்டுமே கிடைப்பதாக அரசின் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு தரும் மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டின் அடிப்படையில் மாவட்டங்களுக்கு மண்ணெண்ணெய் ஒதுக்கீடு செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, குடும்ப அட்டைதாரர்களுக்கு குறைத்து வழங்கப்பட உள்ள மண்ணெண்ணெய் அளவு குறித்து, அனைவரும் அறியும்படி, அனைத்து நியாய விலைக்கடைகளிலும் விளம்பரப்படுத்துமாறு உணவுப் பொருள் வழங்கல்துறை, அனைத்து மாவட்ட அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, கேஸ் சிலிண்டர் இல்லாதவர்களுக்கு 6 லிட்டருக்குப் பதில், 3 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்பட உள்ளது. ஒரு சிலிண்டர் உள்ளோருக்கு 2 லிட்டருக்குப் பதில், ஒரு லிட்டர் விநியோகம் செய்யப்பட உள்ளது.