தமிழ்நாடு

போதிய நீர் இருந்தால் தமிழகத்துக்கு உதவுவோம்: கேரள விவசாயத்துறை அமைச்சர்

போதிய நீர் இருந்தால் தமிழகத்துக்கு உதவுவோம்: கேரள விவசாயத்துறை அமைச்சர்

webteam

கேரளாவில் போதிய நீர் இருந்தால் தமிழகத்துக்கு அளித்து உதவுவோம் என்று அம்மாநில விவசாயத்துறை அமைச்சர் சுனில் குமார் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளை நேரில் சந்தித்து, சுனில்குமார் ஆதரவு தெரிவித்தார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுனில்குமார், மத்திய அரசின் அனுமதியின்றி கேரளாவில் அணை கட்ட மாட்டோம் என்று தெரிவித்தார். பவானி ஆற்றில் அணை கட்டும் விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும் என்றும் அவர் தெரிவித்தார். விவசாயிகளின் குறைதீர்க்க தென்னிந்திய விவசாயிகள் நல நிதியை ஏற்படுத்த வேண்டும் என்றும் சுனில்குமார் தெரிவித்தார்.