தமிழ்நாடு

தமிழருக்கு அரிவாள் வெட்டு: சிகிச்சை அளிக்க மறுத்த கேரள மருத்துவமனை

தமிழருக்கு அரிவாள் வெட்டு: சிகிச்சை அளிக்க மறுத்த கேரள மருத்துவமனை

webteam

கேரள அரசு மருத்துவமனைகளில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு சிகிச்சை அளிக்க மறுத்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர், மலப்புரம் அருகே தங்கி பணிபுரிந்து வருகிறார். அங்கு அவருக்கும் அவரது நண்பர் கோடீஸ்வரன் என்பவருக்கும் இடையே ஏற்‌பட்ட மோதலில், ராஜேந்திரனின் காலை கோடீஸ்வரன் அரிவாளால் வெட்டியுள்ளார்.

இதையடுத்து ராஜேந்திர‌ன் குட்டிபுரம் மற்றும் கோழிக்கோடு அரசு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டும் அங்கு உரிய காரணமின்றி சிகிச்சை அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், மருத்துவர்கள் தங்கள் பொறுப்பை தட்டிக்கழிக்கும் வகையில் நடந்து கொண்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனிடையே, ராஜேந்திரனை அவசரமாக கோவைக்கு அழைத்து வந்து அங்குள்ள ‌அரசு மருத்துவமனையில் உறவினர்கள் அனுமதித்துள்ளனர்.