கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே கேரளாவில் இருந்து கொண்டுவரப்பட்ட இறைச்சி கழிவு லாரியை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
கன்னியாகுமரி குழித்துறை நகராட்சி விளையாட்டு மைதானத்தில் நிறுத்திவைக்கபட்ட லாரியில் துர்நாற்றம் வீசியது. பின்னர் அந்த லாரியில் கழிவுகளை இருந்ததை அறிந்த மக்கள் அங்கு திரண்டு முற்றுகையிட்டனர். அங்கு வந்த காவல்துறையினர் கழிவுகளை மற்றொரு லாரியில் ஏற்றி கேரளாவிற்கு மீண்டும் அனுப்பிவைத்தனர். ஆனால், கேரள காவல்துறையினர் எல்லையில் தடுத்து நிறுத்தி அனுமதி மறுத்தனர். இதனால், கேரள காவல்துறையினரும், தமிழக காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் மாற்றுப்பாதையில் கேரளாவிற்கு அனுப்பிவைத்தாக தெரிவிக்கப்படுகிறது.