திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு கேரள முதலமைச்சர், ஆளுநர், எதிர்க்கட்சித்தலைவர் ஆகியோர் ஒன்றாக அஞ்சலி செலுத்தினர்.
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். ராஜாஜி ஹாலில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப் பட்டது. பல அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பிரதமர் மோடியும் தனி விமானத்தில் வந்து அஞ்சலி செலுத்திவிட்டுச் சென்றார்.
கருணாநிதியின் இறுதி ஊர்வலம் இன்று மாலை 4 மணிக்கு தொடங்குகிறது என்று திமுக தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது. ராஜாஜி ஹாலில் இருந்து புறப்பட்டு சிவானந்தா சாலை, வாலாஜா சாலை வழியாக இறுதி ஊர்வலம் அண்ணா சதுக்கம் சென்றடையும். தொண்டர்களும் பொதுமக்களும் அமைதி காத்திட வேண்டும் என்று திமுக தலைமைக் கழகம் கேட்டுக்கொண்டுள்ளது. அவரது இறுதி ஊர்வலம் ராணுவ மரியாதையுடன் புறப்பட்டுள்ளது.
இதற்கிடையே கருணாநிதியின் உடலுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ஆளுநர் சதாசிவம், எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா ஆகியோர் ஒன்றாக அஞ்சலி செலுத்தினர். அவர்கள் மூன்று ஒன்றாக வந்து அஞ்சலி செலுத்திவிட்டு, ஒன்றாகவே சென்றனர்.