தமிழ்நாடு

கீழடியில் மீண்டும் தொடங்கிய 6-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள்!!

webteam

சிவகங்கை மாவட்டம் கீழடியில் 6-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன

கடந்த பிப்ரவரி 19ம் தேதி முதல் கீழடியில் 6-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் தொடங்கியது. இந்நிலையில் கொரோனோ தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் 23-ம் தேதியுடன் தற்காலிகமாக பணிகள் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த 20-ம் தேதி முதல் கீழடியில் 6-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. இது குறித்து தெரிவித்துள்ள தொல்லியல் துறை அதிகாரிகள்,

5 கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் கீழடியில் மட்டுமே நடைபெற்ற நிலையில் 5ம் கட்ட அகழாய்வில் கண்டறியப்பட்ட செங்கல் கட்டுமானங்களின் தொடர்ச்சியை அறியும் வகையில் 6ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இதில், தொன்மையான மனிதர்களின் வாழ்வியல், கலாச்சாரம், இன மரபியல், மனிதர்களின் நம்பிக்கை ஆகியவற்றை அறியலாம். முதல்கட்டமாக கீழடி , அகரம், கொந்தகை ஆகிய 3 பகுதிகளில் அகழ்வாராய்ச்சி நடைபெற்று வந்த நிலையில் 4வது இடமான மணலூரில் இன்று முதல் அகழ்வாராய்ச்சி பணிகள் தொடங்கியுள்ளோம் என தெரிவித்துள்ளார்.