கீழடியில் தொல்லியல் அருங்காட்சியம் அமைக்க மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் கீழடி அகழாய்வில் கிடைக்கும் பொருட்கள் பெங்களூருக்கு கொண்டு செல்லப்படுகிறது. எனவே கீழடியில் கிடைக்கும் பொருட்களை அங்கேயே வைக்க ஏதுவாக கீழடியில் அருங்காட்சியம் அமைக்கப்பட வேண்டும் என வழக்கறிஞர் கனிமொழி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, அருங்காட்சியம் அமைக்க 2 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. தொல்லியல் துறை தரப்பிலும் கீழடியில் அருங்காட்சியம் அமைக்க ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது. பணிகள் முடிவடைந்த பின் அருங்காட்சியத்தில் பொருட்கள் வைக்கப்படும் என தொல்லியல் துறையும் நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதனையடுத்து கீழடியில் தொல்லியல் அருங்காட்சியம் அமைக்க மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.