தமிழ்நாடு

காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்தது

காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்தது

webteam

காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 10,000 கன அடியிலிருந்து விநாடிக்கு 9,000 கன அடியாக குறைந்துள்ளது.

கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வந்த மழை குறைந்ததால், கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து குறைந்தது. இதனால் நேற்று முன்தினம் கபினியிலிருந்து விநாடிக்கு 1,188 கன அடி, கிருஷ்ணாராஜ சாகர் அணை யிலிருந்து 8,599 கன அடி என மொத்தம் 9,787 கன அடி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டது. இதனால் தமிழகத்துக்கு வரும் தண்ணீரின் அளவும் குறைந்தது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு 10,000 கன அடியாக வந்து கொண்டிருந்த தண்ணீர், காலை நிலவரப்படி விநாடிக்கு 9,000 கன அடியாக சரிந்துள்ளது.

இதனிடையே, நேற்று பகலில் கர்நாடக அணைகளிலிருந்து விநாடிக்கு 11,949 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டிருப்பதால், விரைவில் நீர்வரத்து மீண்டும் அதிகரிக்கும் என மத்திய நீர் ஆணைய அலுவலர்கள் கூறியுள்ளனர். ஒகேனக்கல் ஐந்தருவி களில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவது, கொள்ளை அழகாகக் காட்சியளிக்கிறது. பாதுகாப்பு காரணமாக, தொடர்ந்து 46-வது நாளாக இன்றும் சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது. பரிசல் இயக்க 17-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.