தமிழ்நாடு

கச்சத்தீவு திருவிழா இன்று தொடக்கம்

webteam

கச்சத்தீவில் புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்க உள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கச்சத்தீவில் இன்று தொடங்கி இரு நாள்கள் நடைபெறும் புனித அந்தோணியார் தேவாலய திருவிழாவில், இரு நாடுகளின் உறவுகளை மேம்படுத்தும் விதமாக ஜாதி, மத, மொழி வேறுபாடு இன்றி மத நல்லிணக்க விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்தியா, இலங்கை நாடுகளைச் சேர்ந்த பங்குதந்தைளால் கொடியேற்றத்துடன் துவங்கும் இந்த விழாவில் சிறப்பு திருபலி நடத்தப்படும். பின்னர் இன்று இரவு சிலுவைப்பாடு நிகழ்ச்சியும், திருப்பலியும் நடைபெறவுள்ளது. 

இதனைத்தொடர்ந்து நாளை காலை திருவிழாவின் சிறப்பு திருப்பலி தமிழ் மொழியிலும்,சிங்கள மொழியிலும் நடைபெறவுள்ளது. கச்சத்தீவில் இன்று துவங்கவுள்ள புனித அந்தோணியார் தேவலாய திருவிழாக்காக இருநாட்டு கடற்படையினரின் உதவியோடு அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்துள்ளதாக விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். 

மேலும் இத்தாண்டு தமிழகத்திலிருந்து 2530 பக்தர்கள் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளார்கள். இதற்காக இன்று அதிகாலை 5மணி முதல் தமிழகத்திலிருந்து 65 விசைப்படகுகள் மற்றும் 15 நாட்டுப்படகுகளில் பத்தர்கள் புறப்பட்டு சென்றனர். அவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் மாவட்ட கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா தலைமையில் நடைபெறுகிறது.