தமிழ்நாடு

காசிமேடு இளைஞர் கொலை வழக்கு: 6 பேர் சரண்

காசிமேடு இளைஞர் கொலை வழக்கு: 6 பேர் சரண்

webteam

சென்னை காசிமேடு பகுதியில் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் காசிமேடு காவல் நிலையத்தில் 6 பேர் சரணடைந்தனர்.

சென்னை காசிமேடு பகுதியில் திவாகர் என்பவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். மேம்பாலத்தின் கீழே நின்று கொண்டிருந்தபோது திடீரென வந்த மர்ம நபர்கள், திவாகரை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதில் திவாகர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காசிமேடு காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், இந்தக் கொலை தொடர்பாக 6 பேர் காசிமேடு காவல் நிலையத்தில் சரணடைந்தனர். ஆண்டனி, லோகேஷ், ஸ்டீபன், விமல், சரத், வேல்முருகன் ஆகியோர் காவல் ஆய்வாளர் முன்னிலையில் சரணைந்த நிலையில் அவர்களிடம் கொலைக்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.