அரவக்குறிச்சி அருகே பேருந்துக்காக காத்திருந்த மூதாட்டிகள் மீது மீன் ஏற்றிச் செல்லும் வாகனம் மோதிய விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி கொடையூரைச் சேர்ந்த பெரியம்மாள் (70) மற்றும் ஆறு ரோடு பகுதியைச் சேர்ந்த லட்சுமி (65) ஆகிய இருவரும் உழவர் சந்தை செல்ல பேருந்துக்காக காத்திருந்தனர். அப்போது திண்டுக்கல்லில் இருந்து கரூர் நோக்கி வந்த மீன் ஏற்றிச் செல்லும் சரக்கு வாகனம் நிலைதடுமாறி மூதாட்டிகள் மீது மோதியது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் உயிரிழந்த இருவரின் உடலையும் கைப்பற்றிய அரவக்குறிச்சி காலல்நிலைய போலீசார், கரூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.